கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு
கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் கூட்டமைப்பின் தலைவர் ராஜா உசேன் பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது .கோவையில் மத கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் அமைப்பினர் மீது காவல்துறை தேசத்துரோக வழக்குகள் பதிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் மூலம் எந்த அசம்பாவிதமும் எங்களால் ஏற்படுத்தப்படவில்லை .எனவே இந்த போராட்டத்தை கலைப்பதற்காக இந்துத்துவ அமைப்புகள் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றனர். கடந்த 10ந்தேதி கோவை ராம்நகர், பட்டேல் ரோடு பகுதியில் இக்பால் என்பவர் சில கும்பலால் தாக்கப்பட்டார். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் இந்து முன்னணி ,விஷ்வ ஹிந்து பரிஷத் ,ஆகிய அமைப்புகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இஸ்லாமிய தரப்பிலும் ஒரு சில அப்பாவி இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மேற்சொன்ன அமைப்புகள் மேல் போடப்பட்ட வழக்குகளை காட்டிலும் இஸ்லாமியர்கள் மீது கூடுதலாக கொடூர சட்டங்களை போன்றும், வழக்குகள் போடப்பட்டுள்ளது .எனவே இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுவதின் காரணத்தைப் பார்த்தால் ,மத்திய மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்கப்பட்ட காரணத்தினால் தான் வழக்குகள் பதியப் படுகிறது என்ற சந்தேகம் இருக்கின்றது .எனவே அமைதியாக இருக்கும் கோவையில் மத நல்லிணக்கத்தையும் மக்களின் அமைதியான வாழ்க்கை முறையையும் கெடுக்கும் விதமாக  செயல்படுத்தி வருகின்றனர். எனவே காவல்துறை இதுபோன்ற இந்துக்கள்அமைப்புமீதும் உபா,போன்ற தேசத்துரோக வழக்குகள் தொடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த நேரத்தில் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். கோவையை பொறுத்தவரை காவல்துறையின் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிவ௫கிறோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். உடன் அப்துல் அஜீஸ் ,அப்துல் கபூர், சாதிக்அலி, சாகுல் அமீது உள்பட பலர் பங்கேற்றனர்.

" alt="" aria-hidden="true" />