நல்லூர் ஒன்றியத்திற்கு குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள் " alt="" aria-hidden="true" />
விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் வழங்கினார்
வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்களை விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் வழங்கினார்
கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 64 ஊராட்சிகளில், வேப்பூர், சேப்பாக்கம், பெரியநெசலூர், இறையூர், சவுந்திரசோழபுரம், தொளார் ஆகிய ஊராட்சிகளுக்கு குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்களை மாவட்ட நிர்வாகம் வழங்கியது.
நல்லூர் ஒன்றிய சேர்மன் செல்விஆடியபாதம், துணை சேர்மன் ஜான்சிமேரி தங்கராசன் ஆகியோர் முன்னிலையில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் ஆறு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கினார்.
அப்போது மாவட்ட கவுன்சிலர் சக்திவினாயகம், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துக்கண்ணு, மேகராஜன் மனோகரன், பி.டி.ஓ., காமராஜ், ஊராட்சி தலைவர்கள் வேப்பூர் மகேஸ்வரி திருஞானம், பெரியநெசலூர் மன்னாங்கட்டி, எறையூர் சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்